கண்டமங்கலம் இரட்டை கொலை வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


கண்டமங்கலம் இரட்டை கொலை வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 5 Jan 2022 10:58 PM IST (Updated: 5 Jan 2022 10:58 PM IST)
t-max-icont-min-icon

கண்டமங்கலம் இரட்டை கொலை வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.


விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரை அடுத்த ஒட்டனந்தல் கிராமம் புதுமனை தெருவை சேர்ந்தவர் கணேசன் மகன் கவிதாஸ் (வயது 26). பொக்லைன் டிரைவராக வேலை செய்து வரும் இவர், வேலைக்கு செல்லும் இடங்களில் தனியாக வசிக்கும் பெண்கள், மூதாட்டிகளை நோட்டமிட்டு அவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார். 

அதுபோல் கண்டமங்கலம் அருகே கலித்திராம்பட்டில் சரோஜா (80), அவரது மகள் பூங்காவனம் (60) ஆகிய இருவரும் வீட்டில் தனியாக இருப்பதை நோட்டமிட்ட கவிதாஸ், கடந்த மாதம் 6-ந் தேதி நள்ளிரவு அவர்களது வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்த பூங்காவனம், சரோஜா ஆகிய இருவரையும் பலாத்காரம் செய்து கொலை செய்துவிட்டு அவர்கள் அணிந்திருந்த நகைகளை திருடிச்சென்று விட்டார்.

இதுகுறித்து கண்டமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கவிதாசை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, இவர் இதுபோன்று பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் இவருடைய செயல்களை தடுக்கும்பொருட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய விழுப்புரம் மாவட்ட கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா பரிந்துரை செய்தார்.

குண்டர் சட்டத்தில் கைது

அதன்பேரில் கவிதாசை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யும்படி போலீஸ் சூப்பிரண்டுக்கு மாவட்ட கலெக்டர் டி.மோகன் உத்தரவிட்டார்.
இதையடுத்து கவிதாசை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கண்டமங்கலம் போலீசார் நேற்று கைது செய்தனர்.

 இதற்கான உத்தரவு நகல், கடலூர் சிறையில் இருக்கும் அவருக்கு சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.

Next Story