ரூ.11 லட்சத்து 87 ஆயிரம் உண்டியல் காணிக்கை


ரூ.11 லட்சத்து 87 ஆயிரம் உண்டியல் காணிக்கை
x

வலங்கைமான் மகாமாரியம்மன் கோவிலில் பக்தர்கள் ரூ.11 லட்சத்து 87 ஆயிரம் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். மேலும் 155 கிராம் தங்கமும் செலுத்தப்பட்டு இருந்தது.

வலங்கைமான்;
வலங்கைமான் மகாமாரியம்மன் கோவிலில் பக்தர்கள் ரூ.11 லட்சத்து 87 ஆயிரம் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். மேலும் 155 கிராம் தங்கமும் செலுத்தப்பட்டு இருந்தது. 
மகா மாரியம்மன் கோவில்
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் பிரசித்தி பெற்ற  மகாமாரியம்மன் கோவில் உள்ளது. பாடைகட்டி மகா மாரியம்மன் கோவில் என அழைக்கப்படும் இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் 2-வது ஞாயிற்றுக்கிழமை பாடை காவடி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். 
ரூ.11 லட்சத்து 87 ஆயிரம்
நேற்று இந்த கோவிலில் திருவாரூர் உதவி ஆணையர் ஹரிஹரன் தலைமையில் மகாமாரியம்மன் கோவில்  செயல் அலுவலர் ரமேஷ் மற்றும் ஆய்வாளர் ரமணி ஆகியோர் முன்னிலையில் கோவில் ஊழியர்கள், தனியார் நர்சிங் கல்லூரி மாணவிகள் உள்ளிட்டோர் உண்டியலை திறந்து பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் பக்தர்கள் ரூ.11 லட்சத்து 87 ஆயிரத்து 945 காணிக்கையாக செலுத்தி இருந்தனர். மேலும் 155 கிராம் தங்கமும், 351 கிராம் வெள்ளியும் காணிக்கையாக செலுத்தப்பட்டு இருந்தது.

Next Story