காரையூரில் பெட்டிக்கடையில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் அண்ணன்-தம்பி கைது


காரையூரில் பெட்டிக்கடையில்  விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல்  அண்ணன்-தம்பி கைது
x
தினத்தந்தி 5 Jan 2022 11:10 PM IST (Updated: 5 Jan 2022 11:10 PM IST)
t-max-icont-min-icon

காரையூரில் பெட்டிக் கடையில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டத. இதுதொடர்பாக அண்ணன்-தம்பி இருவரும் கைது செய்யப்பட்டனர்.

காரையூர்:
பெட்டிக்கடை
பொன்னமராவதி தாலுகா காரையூர் காந்தி தெருவைச் சேர்ந்த முகமது அலிஜின்னா மகன் முகமது இஸ்மாயில் (வயது 38). இவரது தம்பி அப்துல்லா (32). இவர்கள் இருவரும் காரையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி எதிரே பெட்டிக் கடை வைத்து வியாபாரம் செய்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து பெட்டிக்கடையில்  வியாபாரம் செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார், காரையூர் சப் -இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் பெட்டிக்கடை மற்றும் அவர்களது வீடுகளில் சோதனை செய்த போது, விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த 157 பாக்கெட்டுகள் குட்காவை பறிமுதல் செய்தனர். 
அண்ணன்-தம்பி கைது 
பின்னர் இருவரையும் கைது செய்தனர். புகையிலை பொருட்கள் மதிப்பு ரூ.20 ஆயிரம் ஆகும். உடனடியாக பெட்டிக்கடைக்கு காரையூர் வருவாய் ஆய்வாளர் பாண்டி, கிராம நிர்வாக அலுவலர் சவுந்தரபாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் ஆகியோர் சீல் வைத்தனர்.

Next Story