சின்னசேலம் அருகே நெல் அறுவடை எந்திரத்தில் சிக்கி விவசாயி உடல் நசுங்கி சாவு வாலிபர் கைது


சின்னசேலம் அருகே  நெல் அறுவடை எந்திரத்தில் சிக்கி விவசாயி உடல் நசுங்கி சாவு வாலிபர் கைது
x
தினத்தந்தி 5 Jan 2022 11:22 PM IST (Updated: 5 Jan 2022 11:22 PM IST)
t-max-icont-min-icon

சின்னசேலம் அருகே நெல் அறுவடை எந்திரத்தில் சிக்கி விவசாயி உடல் நசுங்கி சாவு வாலிபர் கைது

சின்னசேலம்

சின்னசேலம் அருகே வி. அலம்பலம் கிராமத்தைச் சேர்ந்த துரைசாமி மகன் ராமர்(வயது 35) என்பவரின் நெல் அறுவடை எந்திரத்தை வீரபயங்கரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி வரதன்(45) தனது பொறுப்பில் பக்கத்து நிலத்தை சேர்ந்த ரவி என்பவரின் நிலத்தில் நிறுத்தி வைத்திருந்தார்.  இந்த நிலையில் வி.அலம்பலம் தெற்கு காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் விஜயகுமார்(39) என்பவர் நேற்று காலை வீரபயங்கரம் சென்று மேற்படி நெல் அறுவடை எந்திரத்தை எடுத்துச் செல்ல முயன்றார். அப்போது வரதன் எந்திரத்தை ராமர் எனது பொறுப்பில் விட்டுச் சென்றுள்ளார். அவர் வந்ததும் எடுத்துச்செல்லுங்கள் என்று கூறி தடுத்தார். இதை பொருட்படுத்தாத விஜயகுமார் நெல்அறுவடை எந்திரத்தை   பின்னோக்கி     இயக்கினார். இதில் எந்திரத்தின் சக்கரத்தில் சிக்கிய வரதன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து கீழ்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 


Next Story