ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்கக்கோரி காத்திருப்பு போராட்டம்


ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்கக்கோரி காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 5 Jan 2022 11:25 PM IST (Updated: 5 Jan 2022 11:25 PM IST)
t-max-icont-min-icon

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்கக்கோரி திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரடாச்சேரி;
மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்கக்கோரி திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு  விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 
காத்திருப்பு போராட்டம்
 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30ஆயிரம் வழங்க வேண்டும். மழையினால் ஏற்பட்ட விவசாய பாதிப்பால் வேலையிழந்த விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு  ரூ.10 ஆயிரம் வழங்கவேண்டும். பயிர்க்காப்பீட்டு இழப்பீட்டு தொகையை  விடுபட்ட அனைத்து விவசாயிகளுக்கும்  வழங்க வேண்டும்.  
இழப்பீடு
கோமாரி நோயால் கால்நடைகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. 
 போராட்டத்தில் விவசாயிகள் சங்க மாநில செயலாளர் சாமி.நடராஜன், விவசாய தொழிலாளர் சங்க மாநில பொருளாளர் எஸ்.சங்கர், கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்டச் செயலாளர் சுந்தரமூர்த்தி, விவசாயிகள் சங்க நிர்வாகிகள் வி.எஸ்.கலியபெருமாள், எஸ்.தம்புசாமி  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
போதுமான நிவாரணம் இல்லை
இது குறித்து விவசாயிகள் சங்க மாநில செயலாளர் சாமி.நடராஜன்  கூறியதாவது
பலத்த மழையால் திருவாரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் 3 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பாதிப்புக்கு மாநில அரசு அறிவித்துள்ள நிவாரணம் போதுமானதல்ல. தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தபோது மழை பாதிப்பின் போது ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் கேட்டு போராட்டம் நடத்தியது. இதே கோரிக்கையினை வலியுறுத்தி முற்றுகை போராட்டம் 11 மாவட்டங்களிலும் நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story