ரூ.10 லட்சம் வழங்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கைது
மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்கக் கோரி கொரடாச்சேரியில் சாலை மறியல் நடைபெற்றது. மறியலில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.
கொரடாச்சேரி;
மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்கக் கோரி கொரடாச்சேரியில் சாலை மறியல் நடைபெற்றது. மறியலில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.
சாலை மறியல்
மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.10லட்சம் வழங்க வேண்டும், மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும், விடுபட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க்காப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கொரடாச்சேரி வெட்டாற்று பாலம் அருகில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
கைது
மறியல் போராட்டத்துக்கு மாவட்ட துணை செயலாளர் கே.ஆர்.ஜோசப் தலைமை தாங்கினார். போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் எஸ்.கேசவராஜ், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் எம்.பக்கிரிசாமி, எஸ்.ஜி.மணியன், யூ.பன்னீர்செல்வம், எஸ்.சிவானந்தம், கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் கே.ஜெயபால், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்து சிறிது நேரம் கழித்து விடுவித்தனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் திருவாரூர், தஞ்சாவூர், மன்னார்குடி, கும்பகோணம் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மன்னார்குடி
மன்னார்குடி கீழ்பாலம் பகுதியில் நேற்று மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர் ராஜேந்திரன், செயலாளர் சதாசிவம், நகர தலைவர் ராஜ்குமார், நகர செயலாளர் கலியபெருமாள் ஆகியோர் தலைமை தாங்கினார். போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில நிர்வாக குழு உறுப்பினர் வை. செல்வராஜ் கலந்து கொண்டு பேசினார்.
மறியலில் ஈடுப்பட்டவர்களுடன் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து விவசாயிகள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் நேற்று காலை மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை சாலையில் 1 மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story