10 லட்சத்து 59 ஆயிரத்து 203 வாக்காளர்கள் உள்ளனர்


10 லட்சத்து 59 ஆயிரத்து 203 வாக்காளர்கள் உள்ளனர்
x
தினத்தந்தி 5 Jan 2022 11:49 PM IST (Updated: 5 Jan 2022 11:49 PM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மாவட்டத்தில் மொத்தம் 10 லட்சத்து 59 ஆயிரத்து 203 வாக்காளர்கள் உள்ளனர் என்று, கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் கூறினார்.

கொரடாச்சேரி;
திருவாரூர் மாவட்டத்தில் மொத்தம் 10 லட்சத்து 59 ஆயிரத்து 203 வாக்காளர்கள் உள்ளனர் என்று, கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் கூறினார். 
இறுதி வாக்காளர் பட்டியல் 
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் 2022-ம் ஆண்டுக்கான திருத்தம் செய்த இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. பட்டியலை கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் வெளியிட்டார். பின்னர் அவர் கூறியதாவது 
திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருத்துறைப்பூண்டி (தனி), மன்னார்குடி, திருவாரூர், நன்னிலம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல்  வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, திருத்துறைப்பூண்டி சட்டமன்றதொகுதியில் 1 லட்சத்து17 ஆயிரத்து 455 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 22 ஆயிரத்து 967 பெண் வாக்காளர்களும், 3 இதரவாக்காளரும் என மொத்தம் 2 லட்சத்து 40 ஆயிரத்து 425 வாக்காளர்கள் உள்ளனர். 
மன்னார்குடி, திருவாரூர்
 மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 26 ஆயிரத்து 309 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 35 ஆயிரத்து 282 பெண் வாக்காளர்களும், 8 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2 லட்சத்து 61 ஆயிரத்து 599 வாக்காளர்கள் உள்ளனர். திருவாரூர் தொகுதியில் 1 லட்சத்து 37 ஆயிரத்து 405 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 45 ஆயிரத்து 971 பெண் வாக்காளர்களும், 29 இதரவாக்காளர்களும் மொத்தம் 2 லட்சத்து 83 ஆயிரத்து 405 வாக்காளர்களும், நன்னிலம் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 36 ஆயிரத்து 90 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 37 ஆயிரத்து 661 பெண் வாக்காளர்களும், 23 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2 லட்சத்து73 ஆயிரத்து774 வாக்காளர்களும் உள்ளனர். இதன்படி திருவாரூர் மாவட்டத்தில்  மொத்தம் 10 லட்சத்து 59 ஆயிரத்து 203 வாக்காளர்கள் உள்ளனர். 
 நீக்கல், திருத்தங்கள் 
இறுதிவாக்காளர் பட்டியல்கள் திருவாரூர், மன்னார்குடி கோட்டாட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், அனைத்து வாக்குச்சாவடிமையங்கள் முன்பு பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும். வாக்காளர் பட்டியல்களை தேர்தல் ஆணைய வலைதளத்திலும் காணலாம். மேலும் நேற்று முதல் வாக்காளர் பட்டியல் தொடர் திருத்தம் தொடங்கப்பட உள்ளது. இந்தவாய்ப்பினைப் பயன்படுத்தி பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தங்கள் தொடர்பாக விண்ணப்பிக்கலாம். இவ்வாறு கலெக்டர் ப.காயத்ரிகிருஷ்ணன் கூறினார். 
நிகழ்ச்சியில்  மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம்பரம், வருவாய் கோட்டாட்சியர்கள் பாலசந்திரன் அழகர்சாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Next Story