அரக்கோணத்தில் போலீசார், கடற்படை வீரர்கள் 45 பேருக்கு கொரோனா


அரக்கோணத்தில் போலீசார், கடற்படை வீரர்கள் 45 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 5 Jan 2022 6:33 PM GMT (Updated: 2022-01-06T00:03:05+05:30)

போலீசார், கடற்படை வீரர்கள் 45 பேருக்கு கொரோனா

அரக்கோணம்

அரக்கோணம் ஐ.என்.எஸ். ராஜாளி கடற்படை வளாகத்தில் 15 பேர், நகரிகுப்பம் தேசிய பேரிடர் மீட்பு படை மையத்தில் 6 பேர், மத்திய தொழில் பாதுகாப்பு படை மண்டல பயிற்சி மையத்தில் 16 பேர், அரக்கோணம் காவல் கோட்டத்திற்கு உட்பட்ட போலீசார் 8 பேர் என 45 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

 மேலும், அரக்கோணம் அருகே உள்ள கிராமத்தில் 14 வயது சிறுவனுக்கு கடந்த மாதம் உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றான். அப்போது  கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் ஒமைக்ரான் தொற்று அறிகுறி இருப்பதாக கூறப்பட்ட நிலையில் பரிசோதனைக்கான முடிவு தற்போது வந்துள்ளது. அதில் தொடர்ந்து அளிக்கப்பட்ட சிகிச்சையால் குணமடைந்து நல்ல நிலையில் சிறுவன் இருப்பதாகவும், ஆனாலும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணித்து வருவதாகவும், இதனால் பொது மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும் சுகாதார துறையினர் கேட்டுக்கொண்டனர்.

Next Story