கடைகள் முன்பு கூட்டம் கூடினால் கடைகள் மூடப்படும். கலெக்டர் எச்சரிக்கை


கடைகள் முன்பு கூட்டம் கூடினால் கடைகள் மூடப்படும். கலெக்டர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 6 Jan 2022 12:04 AM IST (Updated: 6 Jan 2022 12:04 AM IST)
t-max-icont-min-icon

கடைகள் முன்பு கூட்டம் கூடினால் கடைகள் மூடப்படும் என்று கலெக்டர் குமாரவேல் பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வேலூர்

கடைகள் முன்பு கூட்டம் கூடினால் கடைகள் மூடப்படும் என்று கலெக்டர் குமாரவேல் பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆலோசனை கூட்டம்

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் ஓட்டல்களில் மீதமாகும் உபரி உணவை கையாள்வது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு ஓட்டல்கள் சங்க தலைவர் வெங்கடசுப்பு, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ராஜேஷ், கந்தவேல், வணிகர்கள் சங்க நிர்வாகிகள், ஓட்டல் உரிமையாளர்கள், திருமண மண்டப உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

கூட்டம் கூடினால் நடவடிக்கை

வேலூர் மாவட்டத்தில் வெல்ல மண்டிகளுக்கு வெல்லம் விற்பனை செய்யும் உற்பத்தியாளர்களின் முகவரிகளை சேகரிக்க வேண்டும். உணவு பாதுகாப்பு அலுவலர்கள் வெல்லத்தின் மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்ய வேண்டும். அதில் கலப்படம் கண்டறியப்பட்டால் உற்பத்தியாளருக்கு அறிவுரை வழங்க வேண்டும். மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நோய் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துவது தொடர்பாக வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள பின்பற்ற வேண்டும்.

முதல் தவணை தடுப்பூசி 88 சதவீதமும், 2-ம் தவணை தடுப்பூசி 56 சதவீதமும் போடப்பட்டுள்ளது. இது நல்ல முன்னேற்றமாகும். கடைகள் முன்பு கூட்டம் அதிகமாக இருந்தால் கடைகள் மூட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story