சிராவயலில் மஞ்சுவிரட்டு முன்னேற்பாடு பணிகள்
சிராவயலில் மஞ்சுவிரட்டு முன்னேற்பாடு பணிகள்
திருப்பத்தூர்
திருப்பத்தூர் அருகே உள்ள சிராவயலில் வருகிற 16-ந்தேதி மஞ்சுவிரட்டு நடைபெற உள்ளது. இதற்காக தற்போது அங்கு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது காளைகள் அவிழ்த்து விடும் வாடிவாசல் பகுதியில் இருந்து கம்புகள் ஊன்றப்பட்டு தடுப்பு வேலிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த தடுப்பு மூலம் பார்வையாளர்கள் தடுப்பிற்கு வெளியே நின்று போட்டியை பார்க்கும் வகையிலும், சீறிப்பாய்ந்து செல்லும் காளைகள் நேராக சென்று வெளியேறும் வகையில் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதேபோல் பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் கேலரி மற்றும் முக்கிய பிரமுகர்கள் அமர்ந்து பார்க்கும் கேலரி ஆகிய பகுதிகளும் தயாராகி வருகிறது. தற்போது சிராவயல் மஞ்சுவிரட்டு போட்டி நடத்துவதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளதால் தற்போது முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது.
Related Tags :
Next Story