புதிதாக 74 பேருக்கு கொரோனா


புதிதாக 74 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 6 Jan 2022 12:34 AM IST (Updated: 6 Jan 2022 12:34 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 74 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 74 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
74 பேருக்கு கொரோனா
குமரி மாவட்டத்தில் ஒமைக்ரான் மற்றும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை கொரோனா தினசரி பாதிப்பு 30-க்கும் குறைவாக இருந்து வந்தது. தற்போது தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் சுகாதார பணியாளர் வீடு வீடாக சென்று தடுப்பூசி போடும் பணிகளையும், சளி பரிசோதனைகளையும் தீவிரப்படுத்தி உள்ளனர்.
அதன்படி நேற்று ஒரே நாளில் 3 ஆயித்து 934 பேருக்கு சளி பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் நேற்று புதிதாக 74 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் 43 ஆண்கள், 31 பெண்கள் ஆகும். அதிகபட்சமாக நாகர்கோவிலில் 29 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை
இதைத்தொடர்ந்து தொற்று பாதித்த அனைவரும் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் குமரி மாவட்டத்தில் தற்போது தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 60 ஆயிரத்து 780 ஆக உயர்ந்துள்ளது.

Next Story