நெல்லை கலெக்டர் அலுவலகத்தை ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் முற்றுகை


நெல்லை கலெக்டர் அலுவலகத்தை ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 6 Jan 2022 12:47 AM IST (Updated: 6 Jan 2022 12:47 AM IST)
t-max-icont-min-icon

ஊக்கத்தொகை வழங்க கோாி நெல்லை கலெக்டர் அலுவலகத்தை ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை:
ஊக்கத்தொகை வழங்க கோாி நெல்லை கலெக்டர் அலுவலகத்தை ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முற்றுகை போராட்டம்

தமிழ்நாடு கிராம குடிநீர் மேல்நிலை தொட்டி இயக்குபவர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர் சங்கத்தினர், ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட தலைவர் பரமசிவம் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் மாடசாமி, செயலாளர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூய்மை பணியாளர் சங்க பாளையங்கோட்டை ஒன்றிய பொறுப்பாளர் சின்னத்துரை போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் லயோலா ஜோசப் ஆரோக்கியதாஸ், செயலாளர் மணிகண்டன் உலகநாதன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

ஊக்கத்தொகை

கிராம ஊராட்சிகளில் மேல்நிலை தொட்டி இயக்குபவர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள், ஊரக வளர்ச்சி துறையின் கடைநிலை ஊழியராக பணி புரிபவர்கள் கொரோனா காலத்தில் டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுடன் இணைந்து சுகாதார பணியாற்றினார்கள். 

இதனை கருத்தில் கொண்ட தமிழக அரசு இவர்களை முன்கள பணியாளர்களாக அறிவித்து இவர்களுக்கும் ரூ.15 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்தது. மருத்துவம் மற்றும் சுகாதார துறையினருக்கு ஊக்கத்தொகை வழங்கி விட்டது.

ஆனால் கிராம ஊராட்சி பணியாளர்கள், மேல்நிலை தொட்டி இயக்குபவர்கள், தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்களுக்கு இதுவரை ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை அவர்களுக்கு உடனே ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. 
இதில் நிர்வாகிகள் அய்யப்பன், செந்தில் வேல்முருகன், பெருமாள், கணேசன், இமான், சக்திவேல், மணி, முருகன், பொன்னுத்தாய், சோபனா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story