கஞ்சா கடத்திய 4 பேர் கைது


கஞ்சா கடத்திய 4 பேர் கைது
x
தினத்தந்தி 5 Jan 2022 7:31 PM GMT (Updated: 2022-01-06T01:01:52+05:30)

பாளையங்கோட்டையில் கஞ்சா கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

நெல்லை:

பாளையங்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவகளை மற்றும் போலீசார் கே.டி.சி. நகர் நான்கு வழிச்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை மறித்து சோதனை செய்தனர். அப்போது அதில் கஞ்சா இருந்தது தெரியவந்தது. உடனே 2 பேரும் தப்பி ஓட முயன்றனர். போலீசார் 2 பேரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது, அவர்கள் பாளையங்கோட்டை கனகநாத நாயனார் தெருவை சேர்ந்த சிவா (வயது 24), டேனியல் தாமஸ் தெருவை சேர்ந்த மகாராஜன் என்பதும், மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார், 2 பேரையும் கைது செய்து, 1½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். 

மேலும் பாளையங்கோட்டை பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்ட போது, நெல்லை கருப்பந்துறை அருகே உள்ள தெற்கு விளாகம் பகுதியை சேர்ந்த மாரிமுத்து (24), சாத்தான்குளம் அருகே உள்ள கோமநேரியை சேர்ந்த இசக்கிமுத்து (25) ஆகிய 2 பேரையும் கஞ்சா விற்றதாக கைது செய்தனர். அவர்களிடமிருந்து 15 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story