மதுரையில் இருந்து புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டு
ராமேசுவரம்-ஓகா எக்ஸ்பிரஸ் மதுரையில் இருந்து புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
மதுரை,
மதுரை கோட்டத்துக்கு உட்பட்ட, மதுரை-ராமேசுவரம் ரெயில் பாதையில், மானாமதுரை வரை மின்சார ரெயில் சேவை உள்ளது. அங்கிருந்து டீசல் என்ஜின் பொருத்தப்பட்டு ராமேசுவரத்துக்கு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதற்கிடையே, ராமேசுவரத்தில் இருந்து மதுரை வழியாக குஜராத் மாநிலம் ஓகா கோட்டை வரை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் என்ஜின் மாற்றத்துக்காக நேரம் மாற்றப்பட்டு உள்ளது. அதன்படி, ராமேசுவரம் - ஓகா எக்ஸ்பிரஸ் ரெயில் மதுரை மற்றும் திண்டுக்கல் ரெயில் நிலையங்களில் இருந்து புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதில், வருகிற 11-ந் தேதி ஓகாவில் இருந்து புறப்படும் ரெயில் (வ.எண்.16734) திண்டுக்கல் மற்றும் மதுரை ரெயில் நிலையங்களில் இருந்து முறையே மதியம் 2.50 மற்றும் 3.50 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மதியம் 2.35 மற்றும் 3.25 மணிக்கு புறப்படும். மறுமார்க்கத்தில், ராமேசுவரத்தில் இருந்து வருகிற 14-ந் தேதி புறப்படும் ரெயில் (வ.எண் 16733), திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து நள்ளிரவு 2.45 மணிக்கு பதிலாக நள்ளிரவு 2.40 மணிக்கு புறப்படும்.
Related Tags :
Next Story