கடையம் அருகே கூட்டுறவு வங்கியை விவசாயிகள் முற்றுகை
கடையம் அருகே கூட்டுறவு வங்கியை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
கடையம்,
கடையம் அருகே ரவணசமுத்திரத்தில் உள்ள கோவிந்தப்பேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். விவசாய சங்க மாவட்ட பொருளாளர் முத்துராஜன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் வெங்கடேஷ், விவசாய சங்க கிளைச் செயலாளர் சேகர், கோவிந்தபேரி கிளைச் செயலாளர் கணேசன், அழகப்பபுரம் கிளைச் செயலாளர் முத்தையா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
வங்கியில் உரம் வழங்கப்படாததை கண்டித்தும், உடனடியாக உரம் வழங்க வேண்டியும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. தகவல் அறிந்ததும் கடையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெகுராஜன் தலைமையில் போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story