தென்காசியில் தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
தென்காசியில் தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசி:
தென்காசி புதிய பஸ் நிலையம் அருகில் தமிழ்நாடு கிராம ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி இயக்குனர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா காலத்தில் கிராம பஞ்சாயத்து பணியாளர்கள், டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுடன் இணைந்து பணியாற்றினார்கள். அரசு இவர்களை முன் களப்பணியாளர்கள் என அறிவித்து ரூ.15 ஆயிரம் வழங்குவதாக உத்தரவிட்டது. ஆனால் மருத்துவம் மற்றும் சுகாதார துறையினருக்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்பட்டு விட்டது. அவர்களோடு பணிபுரிந்த கிராம பஞ்சாயத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குனர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்களுக்கு ரூ.15 ஆயிரம் இதுவரை வழங்கப்படவில்லை. அதனை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் அருணாசலம் தலைமை தாங்கினார். பொறுப்பாளர் பராக்கிரம பாண்டியன் வரவேற்றார். செயலாளர் சித்தராஜன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பார்த்தசாரதி, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story