திருமணமான 20-வது நாளில் புதுப்பெண் தற்கொலை


திருமணமான 20-வது நாளில் புதுப்பெண் தற்கொலை
x
தினத்தந்தி 6 Jan 2022 1:17 AM IST (Updated: 6 Jan 2022 1:17 AM IST)
t-max-icont-min-icon

திருமணமான 20-வது நாளில் புதுப்பெண் தற்கொலை

அன்னதானப்பட்டி:-
அன்னதானப்பட்டியில் திருமணமான 20-வது நாளில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக கணவர் உள்பட 3 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
புதுப்பெண்
சேலம் அன்னதானப்பட்டி வள்ளுவர் நகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 28). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ஜோதி (19).
இவர்கள் இருவருக்கும் பெற்றோர் பார்த்து நிச்சயித்த திருமணம் கடந்த 20 நாட்களுக்கு முன்பு நடந்தது. திருமணம் ஆன பிறகு கார்த்திக் தன்னுடைய ெபற்றோருடன் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தார்.
தகராறு
திருமணம் ஆன நாளில் இருந்தே கணவன்- மனைவி இடையே பிரச்சினை இருந்து வந்ததாக தெரிகிறது.
இதனால் ஜோதி மனம் உடைந்து காணப்பட்டாராம். நேற்று கணவன்- மனைவி இடையே வழக்கம் போல் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் கார்த்திக் வேலைக்கு சென்று விட்டார். ஜோதி வீட்டில் உள்ள ஒரு அறைக்கு சென்று கதவை சாத்திக்கொண்டாராம்.
தற்கொலை
அவர் அந்த அறையை விட்டு நீண்ட நேரம் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் அந்த அறைக்குள் சென்று பார்த்தனர். அங்கு அவர்கள் கண்ட காட்சி அதிர்ச்சி அடைய செய்தது. ஜோதி மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் மயங்கி கிடந்தார்.
உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஜோதியை குடும்பத்தினர் அங்குள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ஜோதி பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த கார்த்திக், மனைவி உடலை பார்த்து கதறி அழுதார்.
3 பேரிடம் விசாரணை
இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஜோதி தற்கொலை தொடர்பாக அவருடைய கணவர் கார்த்திக், மாமனார் கோவிந்தராஜன், மாமியார் லட்சுமி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டதால் சேலம் உதவி கலெக்டர் விஷ்ணுவர்த்தினி மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
திருமணம் ஆன 20-வது நாளில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story