ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 43 பேருக்கு கொரோனா
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 43 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் 4 ஆயிரத்து 415 பேருக்கு பரிசோதனை செய்ததில் 41 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது. இந்த நிலையில் நேற்று சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட பட்டியலின்படி மாவட்டத்தில் புதிதாக 43 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 7 ஆயிரத்து 933 ஆக உயர்ந்தது. மேலும் நேற்று பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 47 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 6 ஆயிரத்து 838 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 711 பேர் பலியாகி உள்ள நிலையில் தற்போது தொற்று உள்ள 384 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக உயர்ந்து வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story