திருவொற்றியூரில் இடிந்து விழுந்த கட்டிடத்தின் அருகே இருந்த 20 வீடுகள் இடிப்பு


திருவொற்றியூரில் இடிந்து விழுந்த கட்டிடத்தின் அருகே இருந்த 20 வீடுகள் இடிப்பு
x
தினத்தந்தி 6 Jan 2022 2:14 PM IST (Updated: 6 Jan 2022 2:14 PM IST)
t-max-icont-min-icon

திருவொற்றியூரில் இடிந்து விழுந்த கட்டிடத்தின் அருகே இருந்த 20 வீடுகளை இடிக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது.

சென்னை திருவொற்றியூர் கிராமத்தெருவில் அரிவாக்குளம் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் டி பிளாக்கில் ஒரு பகுதியில் உள்ள 28 வீடுகள் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் எந்தவித உயிரிழப்பும் ஏற்படவில்லை.

அந்த கட்டிடத்தின் தரம் குறித்தும், அப்பகுதியில் உள்ள மண்வளம் குறித்தும் அண்ணா பல்கலைக்கழக வல்லுனர் குழுவினர் தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றனர். 30 இடங்களில் ஆழ்துளையிட்டு மண் பரிசோதனையும் செய்து வருகின்றனர். மேலும் இடிந்து விழுந்த கட்டிடத்தின் கழிவுகள் அனைத்தும் அகற்றப்பட்டு அங்கு மீட்கப்பட்ட நகை, சிலிண்டர், பீரோ உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்தநிலையில் இடிந்து விழுந்த கட்டிடத்தின் மற்றொரு பகுதி கட்டிடம் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் இருந்தது. முன்னெச்சரிக்கையாக பொதுமக்கள் யாரும் அப்பகுதியில் செல்லாத வகையில் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் நேற்று மாலை குடிசை மாற்று வாரிய மேற்பார்வை பொறியாளர் செல்வமணி, செயற்பொறியாளர் செந்தாமரைக்கண்ணன், அப்பகுதி முன்னாள் தி.மு.க. கவுன்சிலர் தி.மு.தனியரசு ஆகியோர் முன்னிலையில் ராட்சத பொக்லைன் எந்திரம் கொண்டு வரப்பட்டு இடிந்து விழுந்த கட்டிடத்தையொட்டி இருந்த 20 வீடுகளை இடிக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது.


Next Story