ஆதித்தனார் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு 2வது தவணை தடுப்பூசி முகாம்
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு 2வது தவணை தடுப்பூசி முகாம் நடந்தது
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் மாணவ-மாணவிகளுக்கு 2-ம் தவணை கொேரானா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடந்தது. கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கி, முகாமை தொடங்கி வைத்தார். சுகாதார ஆய்வாளர் ஆனந்தராஜ் தலைமையில், கிராம சுகாதார செவிலியர்கள் ஜெபகிறிஸ்டி, சண்முகலட்சுமி, முருகேஸ்வரி ஆகியோர் தடுப்பூசி முகாமை நடத்தினர்.
முகாமில், மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், அலுவலர்கள் திரளாக கலந்து ெகாண்டு 2-ம் தவணை தடுப்பூசியை செலுத்திக் கொண்டனர். ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் கதிரேசன், மருதையா பாண்டியன், அபுல்கலாம் ஆசாத் ஆகியோர் செய்திருந்தனர்.
---------------
Related Tags :
Next Story