கிழக்கு கடற்கரை சாலையில் மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்த 2 பேர் கைது
கிழக்கு கடற்கரை சாலையில் மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னையை அடுத்த நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், வெட்டுவாங்கேணி கிழக்கு கடற்கரை சாலையில் மோட்டார் சைக்கிளில் இளைஞர்கள் சாகசத்தில் ஈடுபடுவதாக வந்த புகாரின்பேரில் அடையாறு போக்குவரத்து போலீசார், நேற்று கிழக்கு கடற்கரை சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது வெட்டுவாங்கேணி பஸ் நிறுத்தம் அருகே பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளில் சாகசத்தில் ஈடுபட்ட சோழிங்கநல்லூரைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் தியாகராஜன் (வயது 23), ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த பொக்லைன் டிரைவர் முத்துக்குமார் (20) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். 2 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story