மாநகராட்சி பொறியாளர் உள்பட 132 பேருக்கு கொரோனா


மாநகராட்சி பொறியாளர் உள்பட 132 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 6 Jan 2022 8:05 PM IST (Updated: 6 Jan 2022 8:05 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் மாநகராட்சி பொறியாளர் உள்பட 132 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் வியாழக்கிழமை மேலும் 132 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கொரோனா
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனாலும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தூத்துக்குடி மாநகராட்சி உதவி பொறியாளர் மற்றும் 2 மாநகராட்சி ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து மாநகராட்சியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
இதே போன்று மாவட்டத்தில் கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் அரசு ஆஸ்பத்திரிகளில் படுக்கை வசதிகள் அனைத்தும் மீண்டும் தயார் நிலைக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன. அதே போன்று முன்பு இருந்தது போன்று கல்லூரி வளாகங்களில் கொரோனா பராமரிப்பு மையம் அமைப்பது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மாநகராட்சியில் தினமும் 1100 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை, ஆக்சிஜன் அளவும் பரிசோதனை செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் சிலருக்கு ஓமைக்ரான் பரிசோதனைக்கு மாதிரிகள் சேகரித்து பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
132 பேர்
நேற்று ஒரே நாளில் மேலும் 132 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 57 ஆயிரத்து 61 ஆக அதிகரித்து உள்ளது. நேற்று 18 பேர் கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்து உள்ளனர். இதுரை மொத்தம் 56 ஆயிரத்து 197 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால் மாவட்டம் முழுவதும் மொத்தம் 452 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 412 பேர் கொரோனாவால் இறந்து உள்ளனர்.


Next Story