புதுச்சேரியில் 2 நாட்கள் மதுக்கடைகள் மூடப்படும் என அறிவிப்பு
புதுச்சேரியில் வரும் 15 மற்றும் 18 ஆம் தேதிகளில் அனைத்து மது விற்பனை நிலையங்களும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி,
புதுச்சேரியில் வரும் 15 மற்றும் 18 ஆகிய தேதிகளில் மதுபான கடைகள், பார்கள் என அனைத்து வகையான மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக புதுச்சேரி கலால்துறை துணை கமிஷனர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
‘திருவள்ளுவர் தினம்’ மற்றும் ‘வள்ளலார் ஜோதி தினம்’ ஆகிய தினங்களை முன்னிட்டு புதுச்சேரியில் வருகின்ற 15.01.2022 மற்றும் 18.01.2022 ஆகிய தேதிகளில் மதுபானங்கள் விற்பனை செய்யும் கடைகள், பார்கள், ஓட்டல்கள் மற்றும் ரெஸ்டாரண்டுகள் அனைத்தும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story