நீலகிரியில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன
நீலகிரியில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன
ஊட்டி
கொரோனா பரவலை தடுக்க நீலகிரியில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன.
இரவு ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா, ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதை கட்டுபடுத்த நேற்று முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் இரவு ஊரடங்கு மற்றும் புதிய கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வந்தது.
இதனால் ஊட்டியில் இருந்து கோவை, திருப்பூர், மேட்டுப்பாளையம் போன்ற வெளியிடங்கள் மற்றும் கிராமப்புறங்களுக்கு இயக்கப்பட்ட அரசு பஸ்களில் 50 சதவீத பயணிகள் இருக்கைகளில் அமர்ந்து செல்ல அனுமதிக்கப்பட்டனர். புதிய கட்டுப்பாடு காரணமாக பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது.
50 சதவீத வாடிக்கையாளர்கள்
இருந்தபோதிலும் காலை, மாலையில் அரசு மற்றும் தனியார் வேலை களுக்கு சென்று திரும்பியவர்கள் கூட்டம் வழக்கம் போல் இருந்தது. ஓட்டல்களில் சமூக இடைவெளி விட்டு 50 சதவீத வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவருந்தினர். சலூன் கடைகளில் ஒரு நேரத்தில் 50 சதவீதம் பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். அழகு நிலையங்கள், தியேட்டர் களில் பாதுகாப்பு வழிமுறைகள் கடைபிடிக்கப்பட்டது.
10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே பள்ளிகளுக்கு சென்றனர். கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டு உள்ளதால் மாணவர்கள் வரவில்லை. ஆனால் பேராசிரியர்கள் மட்டும் கல்லூரிகளுக்கு வந்து தேர்வுக்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டனர்.
கடைகள், வணிக நிறுவனங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்த பின்னர் அனுமதிக்க வேண்டும். கூட்டம் கூடக்கூடாது. சளி, காய்ச்சல் போன்ற அறிகுறி தென்பட்டால் உடனடியாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story