பிளஸ்-2 துணைத்தேர்வை நடத்த உத்தரவிடக்கோரி வழக்கு
பிளஸ்-2 துணைத்தேர்வை நடத்த உத்தரவிடக்கோரி வழக்கில் தேர்வுத்துறை இயக்குனர் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
மதுரை,
தூத்துக்குடியைச் சேர்ந்த சக்திஅருண், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், பிளஸ்-2 தேர்வை தனித்தேர்வராக கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் எழுதினேன். இதில் 3 பாடத்தில் தோல்வியடைந்தேன். தோல்வி அடைந்த பாடங்ளை துணைத்தேர்வாக எழுதி தேர்ச்சி பெற வேண்டும். ஆனால் இந்த துணைத்தேர்வை நடத்துவது குறித்து இதுவரை அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
இதனால் என்னைப் போன்ற பலர் பாதிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே இந்த விவகாரத்தில் கோர்ட்டு தலையிட்டு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் நடந்த பிளஸ்-2 தனித்தேர்வில் பங்கேற்றவர்களுக்கான துணைத்தேர்வை உடனடியாக நடத்த உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் வைத்தியநாதன், ஜெயச்சந்திரன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணை’கு வந்தது. முடிவில், இந்த மனு குறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் பதில் அளிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 20-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Related Tags :
Next Story