மதுரையில் புதிதாக 60 பேருக்கு கொரோனா


மதுரையில் புதிதாக 60 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 6 Jan 2022 9:04 PM IST (Updated: 6 Jan 2022 9:04 PM IST)
t-max-icont-min-icon

மதுரையில் புதிதாக 60 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. கொரோனாவுக்கு ஒருவர் பலியாகி உள்ளார்.

மதுரை, 
மதுரையில் புதிதாக 60 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. கொரோனாவுக்கு ஒருவர் பலியாகி உள்ளார்.
கொரோனா
மதுரையில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் புதிதாக 60 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது 4421 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 60 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.
நேற்று 5 பேர் மட்டுமே கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்து வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். 
அதன் மூலம் மதுரையில் கொரோனவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 216 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 25 பேர் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள். 74 பேர் வீட்டு தனிமைப்படுத்துதலில் சிகிச்சையில் இருக்கிறார்கள். மீதமுள்ளவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சையில் இருக்கிறார்கள்.
உயிரிழப்பு
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 50 வயது நபர் ஒருவர் நேற்று கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். அவருக்கு கொரோனா பாதிப்புடன் வேறு சில இணை நோய்கள் இருந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

Next Story