நாகையில், பா.ஜ.க.வினர் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம்


நாகையில், பா.ஜ.க.வினர் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 Jan 2022 9:34 PM IST (Updated: 6 Jan 2022 9:34 PM IST)
t-max-icont-min-icon

நாகையில், பா.ஜ.க.வினர் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வெளிப்பாளையம், ஜன.7 -
 பிரதமர் நரேந்திர மோடி பஞ்சாப் மாநிலத்திற்கு சென்ற போது நடந்த பாதுகாப்பு குளறுபடியை கண்டித்து நாகை மாவட்ட பா.ஜ.க இளைஞரணி சார்பில் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம் நாகை அவுரி திடலில் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் சந்தோஷ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் நேதாஜி ஆர்ப்பாட்டத்தைதொடங்கி வைத்தார்.நகர தலைவர் இளஞ்சேரலாதன், பொது செயலாளர் அறிவழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட இளைஞரணி செயலாளர் சுகுமார் உள்பட பா.ஜ.க.வினர் கலந்து கொண்டு பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசின் பாதுகாப்பு குளறுபடிகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

Next Story