பாம்பு கடித்து நர்சு சாவு


பாம்பு கடித்து நர்சு சாவு
x
தினத்தந்தி 6 Jan 2022 9:50 PM IST (Updated: 6 Jan 2022 9:50 PM IST)
t-max-icont-min-icon

ஆயக்காரன்புலத்தில் பாம்பு கடித்து நர்சு உயிரிழந்தார்.


வாய்மேடு:
வாய்மேட்டை அடுத்த ஆயக்காரன்புலம் 3-ம் சேத்தி முதலியார்குத்தகை பகுதியை சேர்ந்தவர் வீரசேகரன். இவருடைய மகள் பிரதீபா (வயது20). நர்சிங் படித்துள்ள இவர், திருத்துறைபூண்டியில் உள்ள ஒரு தனியார் கடையில் வேலை பார்த்து வந்தார். இந்த ்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு ஆயக்காரன்புலம் நிறுத்தத்தில் பஸ்சில் இருந்து இறங்கி வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது சாலையில் கிடந்த பாம்பு பிரதீபாவை கடித்துள்ளது. உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்சில் சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.  அங்கு சிகிச்சை பலனின்றி பிரதீபா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வாய்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கன்னிகா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story