பெண்ணை கர்ப்பமாக்கி திருமணம் செய்ய மறுத்த காதலன் கைது


பெண்ணை கர்ப்பமாக்கி திருமணம் செய்ய மறுத்த காதலன் கைது
x
தினத்தந்தி 6 Jan 2022 10:28 PM IST (Updated: 6 Jan 2022 10:28 PM IST)
t-max-icont-min-icon

பெண்ணை கர்ப்பமாக்கி திருமணம் செய்ய மறுத்த காதலன் கைது செய்யப்பட்டாா்.


செஞ்சி, 

செஞ்சி பகுதியை சேர்ந்தவர் 26 வயது இளம் பெண். இவரும்  செஞ்சி சங்கராபுரம் சத்திர தெருவை சேர்ந்த ரவி மகன் மணிகண்டன் (வயது 26) என்பவரும் முகநூல் மூலமாக அறிமுகமாகி, பின்னர் காதலித்து வந்துள்ளனர்.


இதில், திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி மணிகண்டன், இளம் பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்துள்ளார். இதில் தற்போது அந்த பெண் 6 மாதம் கர்ப்பமாக இருக்கிறார். இதுபற்றி மணிகண்டனிடம் தெரிவித்து, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு இளம் பெண் கூறியுள்ளார்.

 அப்போது மணிகண்டன் அவரை  திருமணம் செய்ய மறுத்து ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். 

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் செஞ்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மணிகண்டனை கைது செய்தனர்.

Next Story