மேலும் 10 பேருக்கு கொரோனா


மேலும் 10 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 6 Jan 2022 10:45 PM IST (Updated: 6 Jan 2022 10:45 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று 3 பெண்கள் உள்பட மேலும் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதில் செம்பட்டி போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் போலீஸ்காரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவருக்கு, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இதன் எதிரொலியாக போலீஸ் நிலையத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மேலும் அவர் வசிக்கிற கலிக்கம்பட்டி பகுதியிலும் சுகாதாரத்துறையினர் முகாமிட்டு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதுமட்டுமின்றி போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் 6 போலீசாருக்கு நேற்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 

இதேபோல் மீதமுள்ள 20 போலீசாருக்கும் பரிசோதனை செய்ய சுகாதாரத்துறையினர் முடிவு செய்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு ஆளான போலீஸ்காரர், 2 தவணை தடுப்பூசி செலுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

கொேரானா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 33 ஆயிரத்து 377 ஆனது. அதேநேரம் 5 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதையடுத்து குணமடைந்தோர் எண்ணிக்கை 32 ஆயிரத்து 681 ஆக அதிகரித்தது. நேற்றைய நிலவரப்படி 45 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Next Story