உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் திடீர் சாவு


உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் திடீர் சாவு
x
தினத்தந்தி 6 Jan 2022 10:55 PM IST (Updated: 6 Jan 2022 10:55 PM IST)
t-max-icont-min-icon

உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் திடீரென இறந்தார்.

புதுக்கோட்டை:
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 56). மாற்றுத்திறனாளியான இவர், கடந்த ஓராண்டுக்கு முன்பு புதுக்கோட்டை மகளிர் திட்ட அலுவலகத்தில் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். அதை தொடர்ந்து புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உதவி வட்டார வளர்ச்சி அலுவலராக நியமிக்கப்பட்டார். மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டபணிகள் அவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஓர் அறையில் தங்கி பணிசெய்து வந்த நிலையில், நேற்று காலை அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு அமர்ந்திருந்த நாற்காலியிலேயே மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story