தங்க நகைகள் என கருதி கவரிங் நகைகளை கொள்ளையடித்து காரில் தப்பிய 4 பேர் கைது


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 6 Jan 2022 11:09 PM IST (Updated: 6 Jan 2022 11:09 PM IST)
t-max-icont-min-icon

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி அவர் அணிந்திருந்தது தங்க நகைகள் என கருதி கவரிங் நகைகளை கொள்ளையடித்து விட்டு காரில் தப்பிய 4 பேரை போலீசார் குஜராத்தில் கைது செய்தனர்.

மும்பை, 
வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி அவர் அணிந்திருந்தது தங்க நகைகள் என கருதி கவரிங் நகைகளை கொள்ளையடித்து விட்டு காரில் தப்பிய 4 பேரை போலீசார் குஜராத்தில் கைது செய்தனர்.
மூதாட்டியை தாக்கினர்
மும்பை பைகுல்லா மத்திய ரெயில்வே காம்பவுண்ட் பகுதியை சேர்ந்த மூதாட்டி மித்திபாய் (வயது78). கடந்த 3-ந் தேதி இரவு 9 மணி அளவில் 2 பேர் அவரது வீட்டிற்கு வந்தனர். வீட்டில் இருந்த மூதாட்டி மித்திபாயிடம் குடிக்க தண்ணீர் தரும்படி கேட்டனர். இதன்பேரில் அவர் உள்ளே சென்ற போது 2 பேர் உள்ளே நுழைந்தனர். மூதாட்டியை தாக்கி அவர் அணிந்திருந்த நகைகளை பறித்து கொண்டு காரில் தப்பி சென்றனர். இந்த சம்பவத்தில் மூதாட்டி காயமடைந்தார். 
தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று விசாரித்தனர். மேலும் கொள்ளையர்கள் தப்பி சென்ற காரின் பதிவெண்ணை கண்டுபிடிக்க கண்காணிப்பு கேமரா மூலம் விசாரித்தனர்.
4 பேர் கைது
இதில் அந்த கார் ராகுல்சிங் (வயது27) என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. மேலும் கார் குஜராத் மாநிலம் நோக்கி சென்று கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் குஜராத் மாநில போலீசாரை தொடர்பு கொண்டு காரை பிடிக்கும்படி தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த காரை வழிமறித்து அதில் இருந்த 4 பேரை குஜராத் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். 
விசாரணையில் அவர்களது பெயர் ராகுல் சிங் மற்றும் அவரது கூட்டாளிகளான மனாலி பேடேவாலா (31), ஜாகிர் சேக் (26), ரயீஸ் சேக் (29) என்பது தெரியவந்தது. மூதாட்டியை தாக்கி நகைகளை பறித்து சென்றதாக ஒப்புக்கொண்டனர். இதனை தொடர்ந்து நகைகளை பறிமுதல் செய்து, சோதனை நடத்திய போது அனைத்தும் கவரிங் நகைகள் என்பது தெரியவந்தது. இதையடுத்து கைதானவர்களை மும்பை போலீசாரிடம் குஜராத் போலீசார் ஒப்படைத்தனர். இவர்களுக்கு  வேறு கொள்ளை சம்பவங்களில் தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story