ஊத்தங்கரையில் பூட்டிய வீட்டில் திருட முயன்ற பிரபல கொள்ளையன் சிக்கினான்-பொதுமக்கள் சுற்றிவளைத்து பிடித்தனர்
ஊத்தங்கரையில் பூட்டிய வீட்டில் திருட முயன்ற பிரபல கொள்ளையனை பொதுமக்கள் சுற்றிவளைத்து பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
ஊத்தங்கரை:
ஊத்தங்கரையில் பூட்டிய வீட்டில் திருட முயன்ற பிரபல கொள்ளையனை பொதுமக்கள் சுற்றிவளைத்து பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
பூட்டிய வீட்டுக்குள்...
ஊத்தங்கரை எம்.ஜி.ஆர். நகர் அருகே திருப்பத்தூர் ரோட்டில் வசித்து வருபவர் சிவா (வயது 41). இவர் ஊத்தங்கரை அரசமரம் அருகில் மருந்து கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இவர் மருந்து கடைக்கு சென்றுவிட்டார்.
இதனிடையே இவருடைய மனைவியும் வீட்டை பூட்டிவிட்டு மருந்து கடைக்கு வந்தார். பின்னர் அவர் மீண்டும் வீட்டுக்கு சென்றார். அங்கு வீட்டின் பூட்டு உடைத்து வீட்டுக்குள்ளே திருடர்கள் இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
திருடன் சிக்கினான்
உடனடியாக திருடன், திருடன் என அவர் சத்தம் போடவே, அருகில் இருந்த பொதுமக்கள் வீட்டுக்குள் சென்று அங்கு பதுங்கி இருந்த ஒரு திருடனை பிடித்தனர். மற்றொருவன் பொதுமக்களிடம் பிடிபடாமல் தப்பி ஓடிவிட்டான்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும், ஊத்தங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர்லட்சுமி தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்து பிடிபட்ட திருடனை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்தனர்.
இதில் பிடிபட்ட திருடன், வேலூரை சேர்ந்த பிரபல கொள்ளையன் லோகேஷ் (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவனை கைது செய்த போலீசார், கிருஷ்ணகிரி கோா்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவன் ஓசூர் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டான். இவன் மீது வேலூர் மாவட்டத்தில் 15-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story