கிருஷ்ணகிரியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு-அனைத்து கட்சியினர் முன்னிலையில் நடந்தது

கிருஷ்ணகிரியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு-அனைத்து கட்சியினர் முன்னிலையில் நடந்தது
x
தினத்தந்தி 6 Jan 2022 11:21 PM IST (Updated: 6 Jan 2022 11:21 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி, கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில் அனைத்து அரசியல் பிரதிநிதிகள் முன்னிலையில் நடந்தது.

கிருஷ்ணகிரி:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் மாநகராட்சி, கிருஷ்ணகிரி நகராட்சி, மற்றும் 6 பேரூராட்சிகளுக்கு விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.
இதையொட்டி மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீட்டு பணிக்காக நேற்று கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் இருப்பு அறை மாவட்ட கலெக்டரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில் அனைத்து அரசியல் பிரதிநிதிகள் முன்னிலையில் திறக்கப்பட்டது.
ஒதுக்கீடு
முதல்நிலை சரிபார்ப்பு, மற்றும் எந்திரங்கள் சரிபார்ப்பு பணிகள் முடிக்கப்பட்ட நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான, 424 வாக்குச்சாவடிகளுக்கான வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் கட்டுப்பாட்டு கருவி உள்ளிட்ட, 513 வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ளாட்சி அமைப்புகள் வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்டு பிரிக்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் ஊராட்சிகள் உதவி இயக்குனர் வெங்கடாசலம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுபாராணி, சாந்தி, ஸ்ரீதரன் மற்றும் நகர்ப்புற தேர்தல் நடத்தும் அலுவலர்கள், அனைத்து கட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.

Next Story