ஏரியூர் அருகே கிரானைட் தொழிலாளி வீட்டில் ரூ.2 லட்சம், 8 பவுன் நகை திருட்டு-அடுத்தடுத்த 4 வீடுகளிலும் கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்
ஏரியூர் அருகே கிரானைட் தொழிலாளி வீட்டில் ரூ.2 லட்சம் ரொக்கம் மற்றும் 8 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். மேலும் அருகில் உள்ள 4 வீடுகளிலும் பூட்டை உடைத்து திருட முயன்ற மர்ம நபர்கள் அங்கு எதுவும் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தனர்.
ஏரியூர்:
ஏரியூர் அருகே கிரானைட் தொழிலாளி வீட்டில் ரூ.2 லட்சம் ரொக்கம் மற்றும் 8 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். மேலும் அருகில் உள்ள 4 வீடுகளிலும் பூட்டை உடைத்து திருட முயன்ற மர்ம நபர்கள் அங்கு எதுவும் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தனர்.
கிரானைட் தொழிலாளி
தர்மபுரி மாவட்டம், ஏரியூர் அருகே உள்ள கூர்க்காம்பட்டியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக அடுத்தடுத்து 5 வீடுகளில் ஆட்கள் இல்லாததை மர்ம நபர்கள் நோட்டமிட்டனர்.
இதையடுத்து நேற்று முன்தினம் இரவு அந்த மர்ம நபர்கள், கிரானைட் தொழிலாளியான தமிழரசன் வீட்டின் பூட்டை உடைத்து அங்கு நுழைந்தனர். அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ.2 லட்சம் ரொக்கம் மற்றும் 8 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
போலீசார் விசாரணை
பின்னர் வீட்டின் அருகே உள்ள சிவாஜி, பன்னீர், ஜெயக்கொடி, ராணி ஆகியோரின் வீடுகளிலும் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து நுழைந்தனர். அங்கு பொருட்கள் எதுவும் இல்லாததால் ஏமாற்றத்துடன் சென்றுள்ளனர்.
இதனிடையே அடுத்தடுத்து 5 வீடுகளில் அவர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் குறித்து ஏரியூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர்.
ஏரியூர் அருகே அடுத்தடுத்து ஐந்து வீடுகளில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story