காரிமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு


காரிமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 6 Jan 2022 11:33 PM IST (Updated: 6 Jan 2022 11:33 PM IST)
t-max-icont-min-icon

காரிமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

காரிமங்கலம்:
காரிமங்கலம் அருகே தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் விபத்துகள் அதிக அளவில் நடக்கும் இடங்களில் போக்குவரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். தர்மபுரி-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் காரிமங்கலம் அகரம் பிரிவு சாலை பகுதியில் அதிகளவில் விபத்துகள் நடைபெறுகிறது. இதேபோல் பெரியாம்பட்டி மாட்லாம்பட்டி கெரகோடஅள்ளி பிரிவு சாலைகளிலும் விபத்துகள் அதிக அளவில் நடந்து வருகிறது. இந்த பகுதிகளை சேலம் போக்குவரத்து சரக துணை ஆணையர் பிரபாகரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது வாகனங்களின் எண்ணிக்கை, வேகம் மற்றும் சாலையை பொதுமக்கள் கடந்து செல்வது குறித்து நேரில் பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். 
இந்த ஆய்வு தொடர்பாக அதிகாரிகள் கூறும் போது,‘மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துகள் அதிக அளவில் ஏற்படும் இடங்கள் குறித்தும் விபத்துகளை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் அகரம் மாட்லாம்பட்டி ஆகிய பகுதிகளில் மேம்பாலம் அமைப்பது குறித்து 2 நாட்கள் ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வு தொடர்பான அறிக்கையை போக்குவரத்து ஆணையரிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. ஏற்கனவே இப்பகுதியில் பாலம் அமைப்பது தொடர்பாக போக்குவரத்து துறை சார்பில் தேசிய நெடுஞ்சாலை நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது’ என்றார்கள். ஆய்வின்போது வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன், மோட்டார் வாகன ஆய்வாளர் தரணிதரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story