3-வது நாளாக விவசாயிகள் போராட்டம்


3-வது நாளாக விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 6 Jan 2022 11:41 PM IST (Updated: 6 Jan 2022 11:41 PM IST)
t-max-icont-min-icon

வந்வாசியில் 3-வது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வந்தவாசி

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் ஒழுங்கு முறை விற்பனை கூடம் உள்ளது.

வந்தவாசியை சுற்றி உள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் தங்கள் வேளாண் விளைபொருட்களை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். 

அங்கு நடக்கும் முறைகேடுகளை கண்டித்து விவசாயிகள் 2 நாட்களாக போராட்டம் நடத்தினர்.

3-வது நாளான நேற்று அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

துணை போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ்வரய்யா, சப்-இன்ஸ்பெக்டர் மஞ்சுநாதன் ஆகியோர் விரைந்து வந்து அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி எடை போடுவோர் விவசாயிகளிடம் கையூட்டு வாங்கக்கூடாது என்றும் நேற்றைய விலையையே நிர்ணயம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர்.

விவசாயிகளிடம், இனிமேல் இதுபோன்ற தவறுகள் நடக்காது, என உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

Next Story