அருணாசலேஸ்வரர் கோவில் முன்பு நாதஸ்வரம் இசை நிகழ்ச்சி


அருணாசலேஸ்வரர் கோவில் முன்பு நாதஸ்வரம் இசை நிகழ்ச்சி
x
தினத்தந்தி 6 Jan 2022 11:51 PM IST (Updated: 6 Jan 2022 11:51 PM IST)
t-max-icont-min-icon

அருணாசலேஸ்வரர் கோவில் முன்பு நாதஸ்வரம் இசை நிகழ்ச்சி நடந்தது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்ட மருத்துவ குல நாதஸ்வரம் தவில் கலைஞர்கள் முன்னேற்ற நல சங்கம் சார்பில் ஸ்ரீ சரஸ்வதிக்கு 18-ம் ஆண்டு நாதஸ்வர இசை நிகழ்ச்சி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் 16 கால் மண்டபம் முன்பு நடைபெற்றது. 

தலைவர் டி.கே.மோகன் தலைமை தாங்கினார். இதில் 100-க்கும் மேற்பட்ட இசை கலைஞர்கள் கலந்துகொண்டு நேற்று முன்தினம் மாலை 3 மணி முதல் நேற்று அதிகாலை 5 வரை என விடிய, விடிய 14 மணி நேரம் நாதஸ்வரம் மற்றும் தவில் தொடர்ந்து வாசித்தனர். 

முன்னதாக அவர்கள் உலக நன்மைக்காகவும், கொரோனாவில் இருந்து மக்கள் விடுபடவும் இசை நிகழ்ச்சி மூலம் பிரார்த்தனை செய்தனர்.

Next Story