அரசு மருத்துவக்கல்லூரி கட்டமைப்பு குறித்து தேசிய மருத்துவ கவுன்சில் குழு ஆய்வு
ராமநாதபுரத்தில் வருகிற 12-ம் தேதி திறக்கப்பட உள்ள அரசு மருத்துவக்கல்லூரி கட்டமைப்பு வசதிகளின் முழுமை நிலை குறித்து தேசிய மருத்துவ கவுன்சில் குழு நேரில் வந்து ஆய்வுசெய்து ஒவ்வொரு பிரிவுகளாக புகைப்படம் எடுத்துச் சென்றுள்ளது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரத்தில் வருகிற 12-ம் தேதி திறக்கப்பட உள்ள அரசு மருத்துவக்கல்லூரி கட்டமைப்பு வசதிகளின் முழுமை நிலை குறித்து தேசிய மருத்துவ கவுன்சில் குழு நேரில் வந்து ஆய்வுசெய்து ஒவ்வொரு பிரிவுகளாக புகைப்படம் எடுத்துச் சென்றுள்ளது.
புதிய அரசு மருத்துவ கல்லூரி
ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு ரூ.455 கோடியில் கட்டுமான பணிகள் ஏறத்தாழ முடிவடையும் நிலையில் உள்ளன. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள கிருஷ்ணகிரி, விருதுநகர், நாமக்கல், ராமநாதபுரம் உட்பட 11 அரசு மருத்துவ கல்லூரிகளை பிரதமர் மோடி வரும் 12-ந் தேதி விருதுநகரில் நடைபெறும் விழாவில் திறந்து வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை தொடர்ந்து 11 அரசு மருத்துவ கல்லூரிகளை தேசிய மருத்துவ கவுன்சில் குழு சமீபத்தில் இறுதிக்கட்டமாக ஆய்வு செய்தது.
புகைப்படம் எடுத்தனர்
ஒவ்வொரு மருத்துவ கல்லூரியிலும் உள்ள டீன், நிர்வாகம், மருத்துவ பேராசிரியர்கள், அலுவலகங்கள், ஆய்வகம், கல்வியியல் கூடம், உடற்கூறியல் கூடம், மாணவ, மாணவியர் விடுதிகள், நூலகம் உள்ளிட்டவைகளை தனித்தனியாக புகைப்படம் எடுத்து சென்றுள்ளனர்.
இந்த நிகழ்வின் போது கல்லூரி டீன் டாக்டர் அல்லி, கண்காணிப்பாளர் டாக்டர் மலர்வண்ணன் மற்றும் மருத்துவ துறை தலைவர்கள், பேராசிரியர்கள், செவிலியர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story