மாணவர்கள் மத சின்னங்கள் அணிந்து பள்ளிக்கு வர எதிர்ப்பு. ஆசிரியர்கள் மீது இந்து முன்னணியினர் போலீசில் மனு


மாணவர்கள் மத சின்னங்கள் அணிந்து பள்ளிக்கு வர எதிர்ப்பு. ஆசிரியர்கள் மீது இந்து முன்னணியினர் போலீசில் மனு
x
தினத்தந்தி 6 Jan 2022 11:59 PM IST (Updated: 6 Jan 2022 11:59 PM IST)
t-max-icont-min-icon

மாணவர்கள் மத சின்னங்கள் அணிந்து பள்ளிக்கு வர எதிர்ப்பு

வந்தவாசி

வந்தவாசியை அடுத்த தெய்யாறில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. அதில் பணியாற்றும் ஆசிரியர்களில் 2 ேபர், மாணவர்கள் ‘ருத்ராட்சம்’ உள்ளிட்ட மத சின்னங்களை அணிந்து பள்ளிக்கு வருவதை தவிர்க்க வேண்டும், எனக் கூறியதாக தெரிகிறது.

இதுகுறித்து மாணவர்கள் தங்களின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். ெபற்றோர், இந்து முன்னணியினரிடம் தெரிவித்தனர். இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமையில் பலர் பள்ளிக்குச் சென்று மாணவர்களிடம் விசாரணை செய்தனர். சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தலைமை ஆசிரியரிடம் வலியுறுத்தினர்.

தகவல் அறிந்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ்வரய்யா, தெள்ளார் போலீஸ் இன்ஸ்ெபக்டர் சோனியா ஆகியோரிடம் இந்து முன்னணியினர் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு கொடுத்தனர்.

Next Story