மகனின் உயிருக்கு ஆபத்து எனக்கூறி இளம்பெண்ணிடம் நூதன முறையில் 5 பவுன் நகை கொள்ளை


மகனின் உயிருக்கு ஆபத்து எனக்கூறி இளம்பெண்ணிடம் நூதன முறையில் 5 பவுன் நகை கொள்ளை
x
தினத்தந்தி 6 Jan 2022 11:59 PM IST (Updated: 6 Jan 2022 11:59 PM IST)
t-max-icont-min-icon

மகனின் உயிருக்கு ஆபத்து எனக்கூறி இளம்பெண்ணிடம் நூதன முறையில் 5 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.

வேலூர்

மகனின் உயிருக்கு ஆபத்து எனக்கூறி இளம்பெண்ணிடம் நூதன முறையில் 5 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.

குறிசொல்வது போன்று...

வேலூர் கொணவட்டம் பெரியமசூதி, கரீம்சாகிபு தெருவை சேர்ந்தவர் ஜாபர் கான். இவரது மனைவி ஆயிஷா (வயது 29). இவர் நேற்று வீட்டில் இருந்தபோது அந்தவழியாக குறி சொல்வது போன்று ஒரு மர்மநபர் வந்தார். அவர் ஆயிஷாவிடம், அவருடைய மகன் உயிருக்கு ஆபத்து உள்ளதாக கூறினார். மேலும், இதனை சரிசெய்யலாம் என்று கூறி அவர் அணிந்துள்ள நகைகளை கழற்றி கொடுக்குமாறு அவரிடம் தெரிவித்தார்.

இதைநம்பிய ஆயிஷா தான் அணிந்திருந்த தங்க நகைகளை கழற்றி மர்மநபரிடம் கொடுத்துள்ளார். அவர் நகைகளை வாங்கிக் கொண்டு ஒரு மண்பானையில் நகைகளை போட்டு மந்திரம் ஓதி உள்ளார். தொடர்ந்து அவர் தனது கையில் வைத்திருந்த விபூதி போன்ற ஒருவகையான பொடியை எடுத்து ஆயிஷாவின் முகத்தில் படும்படி ஊதினார். சிறிது நேரத்தில் ஆயிஷா மயக்கம்போட்டு கீழே விழுந்தார். 
நகையுடன் மாயம்

பின்னர் சிறிது நேரம் கழித்து எழுந்து பார்த்தபோது அவர் அணிந்திருந்த சுமார் 5 பவுன் நகைகள் மாயமாகி இருந்தது. அந்த மர்மநபரையும் காணவில்லை. மர்ம நபர் நகைகளுடன் தலைமறைவானது தெரியவந்தது.

பின்னர் இதுகுறித்து அவர் வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு அந்த மர்மநபரை தேடி வருகின்றனர்.

Next Story