நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கணினி குலுக்கல் முறையில் ஒதுக்கீடு
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கணினி குலுக்கல் முறையில் ஒதுக்கீடு
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் மாவட்டத்தில் உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் நடைபெறஉள்ள உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கணினி குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும்பணி நேற்று நடந்தது. அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்களை கணினி குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் பணியை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்து, வாக்குப்பதிவு எந்திரங்கள் பிரிக்கப்படுவதை பார்வையிட்டார்.
அப்போது அவர் கூறுகையில், மாவட்டம் முழுவதிலும் உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் 496 கட்டப்பட்டு கருவிகளும், 496 வாக்குப்பதிவு எந்திரங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் கட்டுப்பாட்டு கருவிகள் சம்பந்தப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு தனித்தனியாக எடுத்து வைக்கப்பட்டு அவைகள் சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறையில் வைத்து பாதுகாக்கப்படும் என்றார்.
அப்போது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சி தேர்தல்) மரியம் ஜெரினா மற்றும் அனைத்து நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story