கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் ஒத்திவைப்பு-கலெக்டர் தகவல்
கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்து உள்ளார்.
கரூர்,
நேர்காணல் ஒத்திவைப்பு
கால்நடை பராமரிப்பு துறையில் காலியாக உள்ள உதவியாளர் பணிக்கான நேர்காணல் கரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற இருந்தது. இந்தநிலையில், தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த சமுதாய, கலாசார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தற்போது தமிழக அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதன் காரணமாக கரூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை மூலம் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 12-ந்தேதி வரை நடைபெற இருந்த கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது.
புதிய தேதி அறிவிக்கப்படும்
கரூர் கால்நடை பராமரிப்பு மண்டல இணை இயக்குனர் அலுவலகத்திலிருந்து நேர்காணல் கடிதம் கிடைக்கப்பெற்ற விண்ணப்பதாரர்கள் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டாம். நேர்காணல் குறித்து புதிய தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் அது குறித்து விண்ணப்பதாரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story