தடை செய்யப்பட்ட 13 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
கொசூர் பகுதிகளில் தடை செய்யப்பட்ட 13 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கரூர்,
காலாவதியான உணவு பொருட்கள்
கரூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறையின் நியமன அலுவலர் கலைவாணி தலைமையிலான குழுவினர் தோகைமலை பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள கடைகளில் பிரெட், ரஸ்க், முறுக்கு, அதிரசம் உள்ளிட்ட உணவு பொருட்களில் உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் பெயர், உணவுப்பொருள் தயாரிக்கப்பட்ட காலம், காலாவதியாகும் காலம் போன்ற தகவல்கள் ஏதும் இல்லாமல் இருப்பது தெரியவந்தது. மேலும், காலாவதியான குளிர்பானங்கள் மற்றும் உணவு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, காலாவதியான உணவு பொருட்களை விற்பனை செய்த 5 பேக்கரிகளுக்கு தலா ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், இந்த 5 பேக்கரிகளும் தாங்களாகவே முன்வந்து தற்காலிகமாக விற்பனையை நிறுத்திக் கொண்டனர்.
புகையிலை பொருட்கள் பறிமுதல்
இதனைத்தொடர்ந்து கொசூர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 6 கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், 13 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுபோன்று அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
Related Tags :
Next Story