லோடு ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது


லோடு ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது
x

நெல்லையில் லோடு ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை:
நெல்லை மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி மற்றும் போலீசார் களக்காடு அருகே உள்ள காடுவெட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் வந்த ஒரு லோடு ஆட்டோவை மறித்து சோதனை செய்தனர். அப்போது அதில் 40 மூட்டைகளில் 2 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. உடனே போலீசார் அதில் இருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் களக்காடு அருகே உள்ள அப்பர் குளம் பகுதியை சேர்ந்த மாரியப்பன் (வயது 32), நாங்குநேரி அருகே உள்ள மஞ்சன்குளம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (37) ஆகியோர் என்பதும், லோடு ஆட்டோவில் ரேஷன் அரிசியை கடத்தி வந்ததும் தெரியவந்தது. உடனே போலீசார் 2 பேரையும் கைது செய்து, 2 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசியை லோடு ஆட்டோவுடன் பறிமுதல் செய்தனர்.

Next Story