பஞ்சு வைத்திருந்த அறையில் தீவிபத்து


பஞ்சு வைத்திருந்த அறையில் தீவிபத்து
x
தினத்தந்தி 7 Jan 2022 1:03 AM IST (Updated: 7 Jan 2022 1:03 AM IST)
t-max-icont-min-icon

ராஜபாளையத்தில் பஞ்சு வைத்திருந்த அறையில் தீவிபத்து ஏற்பட்டது.

ராஜபாளையம்,
ராஜபாளையத்தை சேர்ந்த விஸ்வநாதன் என்பவர் பஞ்சு மார்க்கெட் நேரு சிலை அருகே மருத்துவ மனையில் பயன்படுத்தும் பஞ்சை மொத்தமாக வாங்கி பஞ்சு ஆலை நடத்தி வருகிறார். மேலும் பண்டல் போட்டு சில்லரை விற்பனையில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று பஞ்சு பொதிகள் இருப்பு வைத்திருந்த பேக்கிங் அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனே தொழிலாளர்கள் அறையை விட்டு வெளியேறியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ராஜபாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயராமன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அறையின் மேற்கூரையை உடைத்து 1 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், அந்த அறையில் இருந்த  மருத்துவ பஞ்சு பண்டல்கள் தீயில் எரிந்து சேதமானது. இதுகுறித்து வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story