குறைந்த அளவில் சூரியகாந்தி சாகுபடி
விருதுநகர் மாவட்டத்தில் சூரியகாந்தி விதை தட்டுப்பாடு இருந்த போதிலும் விருதுநகர் அருகே குறைந்த அளவில் சூரியகாந்தி சாகுபடி நடந்துள்ள நிலையில் அதற்கு போதுமான விலை கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் சூரியகாந்தி விதை தட்டுப்பாடு இருந்த போதிலும் விருதுநகர் அருகே குறைந்த அளவில் சூரியகாந்தி சாகுபடி நடந்துள்ள நிலையில் அதற்கு போதுமான விலை கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.
சூரியகாந்தி சாகுபடி
விருதுநகர் மாவட்டத்தில் வழக்கமாக 2 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் சூரியகாந்தி சாகுபடி செய்யப்படும். ஆனால் தற்போது சூரியகாந்தி விதை தட்டுப்பாட்டால் அதிகபட்சமாக 100 ஏக்கர் நிலத்தில் மட்டுமே சூரியகாந்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
அதிலும் விருதுநகர் அருகே மீசலூரில் சூரியகாந்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் அதிகாரிகள் தரப்பில் சூரியகாந்தி சாகுபடிக்கு எவ்வித ஒத்துழைப்பும் அளிக்கப்படவில்லை என்று விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
இதுபற்றி தமிழக விவசாயிகள் சங்க மாநில நிர்வாகி விஜயமுருகன் கூறியதாவது:-
மாவட்டத்தில் நடப்பாண்டில் சூரியகாந்தி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு விதை கிடைக்கவில்லை. அவர்கள் கையிருப்பில் உள்ள விதைகளை கொண்டு சூரியகாந்திசாகுபடி செய்துள்ளனர்.
நடவடிக்கை
அரசு தரப்பிலும் விதைகள் கிடைப்பதற்கு தேவையான நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.
இதனால் மாவட்டத்தில் குறைந்த நிலப்பரப்பில் சூரியகாந்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் சூரியகாந்திக்கு உரிய விலை கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் செய்த செலவாவது திரும்ப கிடைக்குமா என்ற சந்தேகத்தில் காத்திருக்கின்றனர்.
மத்திய அரசை பொறுத்தமட்டில் எண்ணெய் வித்துக்களை இறக்குமதி செய்வதால் உள்நாட்டில் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சூரியகாந்தி சாகுபடி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மத்திய அரசு இந்திய விவசாயிகளை ஊக்கப்படுத்துவதற்காக எண்ணெய் வித்துக்கள் இறக்குமதியை ரத்து செய்து உள்நாட்டில் எண்ணெய் உற்பத்தி அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story