கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 500 படுக்கைகள் அமைக்க நடவடிக்கை
சேலம் மாநகராட்சி பகுதியில் ெகாரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 500 படுக்கைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஆணையாளர் கிறிஸ்துராஜ் கூறினார்.
சேலம்:
சேலம் மாநகராட்சி பகுதியில் ெகாரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 500 படுக்கைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஆணையாளர் கிறிஸ்துராஜ் கூறினார்.
தற்காலிக சிகிச்சை மையம்
சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலத்திற்குட்பட்ட தொங்கும் பூங்காவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக தற்காலிக சிகிச்சை மையம் அமைக்கப்படுகிறது. இந்த பணியை மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் நேற்று பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:-
மாநகராட்சி பகுதிகளில் கொரோனா நோய் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது. அதே போன்று மாநகராட்சி பகுதிகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் முதல் கட்டமாக 500 படுக்கை வசதி கொண்ட தற்காலிக சிகிச்சை மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேவையான மருந்து, மாத்திரைகள் தயார் நிலையில் உள்ளன.
ஆக்சிஜன் சிலிண்டர்கள்
அதன்படி தொங்கும் பூங்கா பல்நோக்கு மையத்தில் 200 படுக்கைகள் அமைக்கப்படுகின்றன. அதே போன்று மகாத்மா காந்தி விளையாட்டு மைதான உள்அரங்கத்தில் 100 படுக்கைகள், சூரமங்கலம் மண்டலத்திற்குட்பட்ட ஸ்ரீகிருஷ்ணா ராஜேந்திரா சத்திர வளாகத்தில் 200 படுக்கைகளும் அமைக்கப்படுகின்றன. மேலும் 92 ஆக்சிஜன் சிலிண்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது மாநகர நல அலுவலர் டாக்டர் யோகானந்த், உதவி ஆணையாளர் மணிமொழி உள்பட அலுவலர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story