ஈரோடு மாவட்டத்தில் மேலும் 47 பேருக்கு கொரோனா


ஈரோடு மாவட்டத்தில் மேலும் 47 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 7 Jan 2022 2:18 AM IST (Updated: 7 Jan 2022 2:18 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் மேலும் 47 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் 4 ஆயிரத்து 463 பேருக்கு பரிசோதனை செய்ததில் 43 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது. இந்த நிலையில் நேற்று சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட பட்டியலின்படி மாவட்டத்தில் புதிதாக 47 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 7 ஆயிரத்து 981 ஆக உயர்ந்தது.
மேலும் நேற்று பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 52 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 6 ஆயிரத்து 890 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 711 பேர் பலியாகி உள்ள நிலையில் தற்போது தொற்று உள்ள 380 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Next Story