மோட்டார் சைக்கிளை திருடி விற்ற வாலிபர் கைது


மோட்டார் சைக்கிளை திருடி விற்ற வாலிபர் கைது
x
தினத்தந்தி 6 Jan 2022 8:58 PM GMT (Updated: 6 Jan 2022 8:58 PM GMT)

மோட்டார் சைக்கிளை திருடி விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தா.பழூர்:
தா.பழூர் அருகே உள்ள சீனிவாசபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால். விவசாயியான இவர், கடந்த நவம்பர் மாதம் தனது மோட்டார் சைக்கிளை தா.பழூர் சிவன் கோவில் முன்பு நிறுத்தி விட்டு கோவிலுக்குள் சென்றார். சாமி கும்பிட்டுவிட்டு வெளியில் வந்து பார்த்தபோது அவரது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதுகுறித்து தா.பழூர் போலீசில் ஜெயபால் அளித்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தார். இந்தநிலையில் கடந்த மாதம் தா.பழூர் சுத்தமல்லி பிரிவு சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை நிறுத்தி விசாரித்தனர்.
இதில் அவர் கோடாலிகருப்பூரை சேர்ந்த புகழ்மணி என்பதும், அவர் ஓட்டி வந்தது ஜெயபாலின் மோட்டார் சைக்கிள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையின்போது, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 2-ந் தேதி தா.பழூர் கடைவீதியில் தான் இருந்தபோது, அங்கு வந்த தா.பழூர் தோப்புத்தெருவை சேர்ந்த ராம்குமார்(வயது 29) செலவுக்கு பணம் இல்லை என்று கூறி அவர் வைத்திருந்த மோட்டார் சைக்கிளை தன்னிடம் விற்றுவிட்டு ரூ.3 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு, மோட்டார் சைக்கிளின் ஆர்.சி. புத்தகத்தை கொடுக்கும்போது மீதி பணத்தை பெற்றுக் கொள்கிறேன் என்று கூறிச்சென்றதாகவும், நீண்ட நாட்களாகியும் ஆர்.சி. புத்தகத்தை கொடுக்காததால் அதனை பெற்றச்செல்ல தான் வந்ததாகவும், போலீசார் விசாரித்தபோதே அது திருட்டு மோட்டார் சைக்கிள் என்பது தெரியவந்ததாகவும் புகழ்மணி கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து ராம்குமாரை பிடித்து போலீசார் விசாரித்தனர். பின்னர் அவரை கைது செய்து, மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

Next Story